Amazing Poems / Lyrics , Collections of Vaali ayya – Vol 1
1. கப்பலேறிப் போயாச்சு — Indian
அன்னமே அன்னமே நான் சொல்லி
வந்ததா தென்றலும் நேற்று
உன்னையே உன்னையே நான் எண்ணி
வெந்ததைச் சொன்னதா பூங்காற்று
உந்தன் காலின் மெட்டி போல் கூட நடப்பேன்
உந்தன் கண்ணுக்குக் கண்ணீர்போல் காவல
இருப்பேன்
2. வெண்மதி வெண்மதியே நில்லு – Minnale
ஜன்னலில் வழி வந்து விழந்தது
மின்னலின் ஒளி அதில் தெரிந்தது
அழகு தேவதை அதிசய முகமே ஆ… ஹ ஹா ஹா
தீப்பொறி என இரு விழிகளும்
தீக்குச்சி என எனை உரசிட
கோடிப்பூக்களாய் மலர்ந்தது மனமே
அவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே
அளந்து பார்க்க பல விழி இல்லையே
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே..
3. கொஞ்சநாள் பொறு தலைவா! – Aasai
என்னுடைய காதலிய
ரொம்ப ரொம்ப பத்திரமா
எண்ணம் எங்கும் ஒட்டிவச்ச
வண்ண வண்ணச் சித்திரமா!
வேறொருத்தி வந்து தங்க
எம்மனசு சத்திரமா!
4. நியூயார்க் நகரம் – Sillunu Oru Kadhal
நாட்குறிப்பில் நூறு
தடவை உந்தன் பெயரை
எழுதும் என் பேனா எழுதியதும்
எறும்பு மொய்க்க பெயரும்
ஆனதென்ன தேனா
ஓ ஓ ஓ ஓ ஓ
சில்லென்று பூமி
இருந்தும் இந்த தருணத்தில்
குளிர்காலம் கோடை
ஆனதேனோ
வா அன்பே நீயும்
வந்தால் செந்தணல் கூட
பனிகட்டி போல மாறுமே
யே யே யே யே
5. அவளுக்கென்ன – Server sundaram
அவளுக்கென்ன அழகிய முகம்
அவளுக்கென்ன அழகிய முகம்
அவனுக்கென்ன இளகிய மனம்
நிலவுக்கென்ன
இரவினில் வரும் இரவுக்கென்ன
உறவுகள் தரும் உறவுக்கென்ன
உயிருள்ள வரை தொடர்ந்து வரும்
ஹோ.அழகு ஒரு மேஜிக் டச்
ஹோ ஆசை ஒரு காதல் ஸ்விட்ச்
ஒ.ஓஒ..ஹோ..
அழகு ஒரு மேஜிக் டச்
ஹோஓஒ..ஹோ.
ஆசை ஒரு காதல் ஸ்விட்ச்